நெடுந்தீவை பிறப்பிடமாகவும்,புளியங்கூடலை வசிப்பிடமாகவும்,கொழும்பு, கச்சேரியடி ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த எமது தந்தையார் கந்தையா பசுபதி அவர்களின் மூன்றாம் ஆண்டு(30.06.2012)நினைவு நாளையொட்டி இவ்வலைப்பூ கனத்த இதயங்களுடன் ஆரம்பிக்கப்படுகிறது.
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 23 அக்டோபர், 2012
சனி, 30 ஜூன், 2012
இன்றைய நாள்!
இன்றைய நாள் எம் மனங்கள்
துன்பத்தீயில் கருகிய நாள்!
உடல் சோர்ந்து தவித்த நாள்!
நினைந்து நினைந்து வதைபட்ட நாள்!
இன்றைய நாள் எம் உயிர் கொண்டு வந்த தந்தை
தன் உயிர் பிரிந்து சென்ற நாள்!
இன்றைய நாள் எம் தந்தையை இழந்த
மூன்றாம் ஆண்டு நினைவு நாள்!
எத்தனை எத்தனை ஆண்டுகளாயினும்
ஒவ்வொரு நாட்களும் தந்தையின்
எண்ணங்கள் நிலைத்திருக்கும் நாட்களே!
துன்பத்தீயில் கருகிய நாள்!
உடல் சோர்ந்து தவித்த நாள்!
நினைந்து நினைந்து வதைபட்ட நாள்!
இன்றைய நாள் எம் உயிர் கொண்டு வந்த தந்தை
தன் உயிர் பிரிந்து சென்ற நாள்!
இன்றைய நாள் எம் தந்தையை இழந்த
மூன்றாம் ஆண்டு நினைவு நாள்!
எத்தனை எத்தனை ஆண்டுகளாயினும்
ஒவ்வொரு நாட்களும் தந்தையின்
எண்ணங்கள் நிலைத்திருக்கும் நாட்களே!
வெள்ளி, 29 ஜூன், 2012
வாழ்க்கை இனிக்க
தவிர்க்க வேண்டிய மூன்று-புகைத்தல்,மது அருந்துதல்,சூதாடுதல்
அடக்க வேண்டிய மூன்று-நாக்கு,கோபம்,ஆசை
கவனிக்க வேண்டிய மூன்று-பேச்சு,நடைமுறை,செயல்
ஒழிக்க வேண்டிய மூன்று-திருட்டு,பொய்,சோம்பல்
ஆதரிக்க வேண்டிய மூன்று-வாக்குறுதி,நட்பு,அன்பு
மதிக்க வேண்டிய மூன்று-முதியோர்,மார்க்கம்,சட்டம்
நேசிக்க வேண்டிய மூன்று-தூய்மை,நேர்மை,கடின உழைப்பு
போற்ற வேண்டிய மூன்று-தைரியம்,மனமகிழ்ச்சி,திருப்தி
அடக்க வேண்டிய மூன்று-நாக்கு,கோபம்,ஆசை
கவனிக்க வேண்டிய மூன்று-பேச்சு,நடைமுறை,செயல்
ஒழிக்க வேண்டிய மூன்று-திருட்டு,பொய்,சோம்பல்
ஆதரிக்க வேண்டிய மூன்று-வாக்குறுதி,நட்பு,அன்பு
மதிக்க வேண்டிய மூன்று-முதியோர்,மார்க்கம்,சட்டம்
நேசிக்க வேண்டிய மூன்று-தூய்மை,நேர்மை,கடின உழைப்பு
போற்ற வேண்டிய மூன்று-தைரியம்,மனமகிழ்ச்சி,திருப்தி
வளமான வாழ்விற்கு
தூய்மையாக இருப்பதும் மற்றவர்களிற்கு
நன்மை செய்வதும்தான்
எல்லா வழிபாடுகளினதும் சாரமாகும்.
தீமை செய்பவன் தனக்கும் மற்றவர்களுக்கும் தீமை செய்கிறான்,
நன்மை செய்பவன் தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்கிறான்.
உடலும் உள்ளமும் தூய்மையின்றி கோயிலுக்குப் போவதும்
இறைவனை வழிபடுவதும் பயனற்றதாகும்.
நேர்மையுடனும் தைரியமாகவும் பக்தி சிரத்தையுடனும் வாழ்ந்தால் இறைவனை அடைவது உறுதி.
"நன்நெறியே இறை வணக்கம்"
-சுவாமி விவேகானந்தர்-
எல்லா வழிபாடுகளினதும் சாரமாகும்.
தீமை செய்பவன் தனக்கும் மற்றவர்களுக்கும் தீமை செய்கிறான்,
நன்மை செய்பவன் தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்கிறான்.
உடலும் உள்ளமும் தூய்மையின்றி கோயிலுக்குப் போவதும்
இறைவனை வழிபடுவதும் பயனற்றதாகும்.
நேர்மையுடனும் தைரியமாகவும் பக்தி சிரத்தையுடனும் வாழ்ந்தால் இறைவனை அடைவது உறுதி.
"நன்நெறியே இறை வணக்கம்"
-சுவாமி விவேகானந்தர்-
அன்பின் தந்தையே!
எனது பாசத்திற்குரிய தந்தையே!
அன்பெனும் கூட்டில் எமை கலைத்திடாது காத்த என் உயிரே!
எனது சிறு வயதில் எப்படி வளர்த்தீர்களோ அதே போல்
செல்லமாய் இறுதிவரை பார்த்தீர்களே!
இதயமெல்லாம் துயரமாகவே கனக்கிறது,
உறங்கினாலோ உங்கள் கனவுகள் வந்து சுடுகிறது!
உங்கள் நோய் அறிந்து துயர் என்னை நெருங்கியது
உங்கள் பிரிவறிந்து மகிழ்வென்னை பிரிந்தது!
எனக்கு பின்னும் நீங்கள் வாழவேண்டும் என நினைத்தேன்
அந்தோ இடி விழுந்த செய்தியாலே நான் துடித்தேன்!
அப்பு அப்பு என தேனொழுக அழைத்த வார்த்தை
இனி என் செவிகளுக்கு கேளாதா என நினைத்து
நாளும் பொழுதும் இங்கு தவிக்கின்றேன்!
எனக்கொரு துயரென்றால் உங்களிடம் சொல்லி
ஆறுதல் பெற்று வந்தேன்
ஆனால் இன்றோ மிகப்பெரும் துயர் கொண்டேன் தந்தையே
ஓடி வந்து எந்தன் துன்பம் நீக்க மாட்டீர்களோ தந்தையே!
காலங்கள் மாறும்,காட்சிகளும் மாறும் ஆனாலும்
உங்கள் நினைவுகள் நிலைத்திருக்கும் நெஞ்சிலே!
நீங்கள் என்றுமே என்னுள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்! தந்தையே!
இது நான் உங்களுக்கு செலுத்தும் வணக்க நிகழ்வல்ல,
உங்களுக்கு நான் எழுதும் கடிதம்.
என்றென்றும் உங்கள் செல்லக்குட்டி!
அன்பெனும் கூட்டில் எமை கலைத்திடாது காத்த என் உயிரே!
எனது சிறு வயதில் எப்படி வளர்த்தீர்களோ அதே போல்
செல்லமாய் இறுதிவரை பார்த்தீர்களே!
இதயமெல்லாம் துயரமாகவே கனக்கிறது,
உறங்கினாலோ உங்கள் கனவுகள் வந்து சுடுகிறது!
உங்கள் நோய் அறிந்து துயர் என்னை நெருங்கியது
உங்கள் பிரிவறிந்து மகிழ்வென்னை பிரிந்தது!
எனக்கு பின்னும் நீங்கள் வாழவேண்டும் என நினைத்தேன்
அந்தோ இடி விழுந்த செய்தியாலே நான் துடித்தேன்!
அப்பு அப்பு என தேனொழுக அழைத்த வார்த்தை
இனி என் செவிகளுக்கு கேளாதா என நினைத்து
நாளும் பொழுதும் இங்கு தவிக்கின்றேன்!
எனக்கொரு துயரென்றால் உங்களிடம் சொல்லி
ஆறுதல் பெற்று வந்தேன்
ஆனால் இன்றோ மிகப்பெரும் துயர் கொண்டேன் தந்தையே
ஓடி வந்து எந்தன் துன்பம் நீக்க மாட்டீர்களோ தந்தையே!
காலங்கள் மாறும்,காட்சிகளும் மாறும் ஆனாலும்
உங்கள் நினைவுகள் நிலைத்திருக்கும் நெஞ்சிலே!
நீங்கள் என்றுமே என்னுள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்! தந்தையே!
இது நான் உங்களுக்கு செலுத்தும் வணக்க நிகழ்வல்ல,
உங்களுக்கு நான் எழுதும் கடிதம்.
என்றென்றும் உங்கள் செல்லக்குட்டி!
செவ்வாய், 26 ஜூன், 2012
வாழ்க்கைப் பாதை!
"நட்பு"கொடை என்ற நற்பண்புகள் சிலருக்கு கொடையாகியே விடுகின்றன"
இந்த வகையில் வாழ்ந்து காட்டிய ஒரு மாமனிதர்தான் திரு,கந்தையா பசுபதி
அவர்கள்.
நெடுந்தீவு!இது புவி வரைபில் புள்ளியிட்டுக் காட்ட முடியாத சிறு தீவாக இருந்தபோதும்
பல்வேறு துறைகளில் சொல்லப்படுபவர்களாக பாரெங்கும் பரவி வாழும் மக்களை பிரசவித்த
ஒரு கருவறை என்பது யாவரும் அறிந்த ஓர் உண்மை.
இந்த நெடுந்தீவு இலங்கை நாட்டின் அமைப்பிலும்,செயலிலும் தலைபோன்று அமையப் பெற்றது.
அந்த புண்ணிய மண்பாகம் தாங்கிப்பிடித்த தங்கக் குழந்தையாக 15.03.1926ல் பசுபதி அவர்கள்
அவதரித்தார்.
கரமத்தை முருகன் அருள் மல்க வாழ்ந்த திரு,திருமதி,கந்தையா-கனகம் தம்பதிகள் ஆலயத்தொண்டிலும்,
சேவையிலும் சிறந்து விளங்கியவர்கள்,தெய்வகடாட்சம் பெற்றவர்களாக வாழ்ந்த குடும்பத்தினர்.
இவர்களது வாழ்வின் சிறப்பும்,அயலவரோடு காட்டிய அன்பும் பண்பும் அந்த சுற்றாடலில் சிறந்த
நன்மதிப்பை பெற காரணமாக அமைந்ததெனலாம்.
இப்படியொரு வளமான வாழ்வின்போது கந்தையா தம்பதிகளுக்கு தோன்றிய செல்வங்களாகவும்
திருவாளர் பசுபதி அவர்களின் சகோதரர்களாகவும்
1)அருணாசலம்
2)நாகேஷ்
3)கணபதிப்பிள்ளை
4)நாகரத்தினம்
என்ற ஆண்சகோதரர்களும்
5)மாணிக்கம்
6)வள்ளியம்மை
7)பார்வதி
8)சின்னத்தங்கம்
என்ற பெண்சகோதரிகளும் பிறப்பெடுத்திருந்தனர்.
அன்றைய ஒரு சராசரி குடும்பத்தவர் செய்ததை விடவும் மேலாக கந்தையா
அவர்கள் பிள்ளைச்செல்வங்கள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்ததும்,
நேரம் தவறாத உணவும்,ஆடை அணிகலன்கள் என வலி தெரியாமல் பிள்ளைகளை
வளர்த்தெடுத்தார்.இந்தவகையில் வளர்ப்பில் எழிலும் துணிவும் நிறைந்து எல்லையற்ற துடிப்போடு
பள்ளிப்பருவம் அடைந்தார் பசுபதி அவர்கள்.சற்றுக்குறும்பான குழந்தைப் பருவம்
என்றபோதும் சைவப்பிரகாசா வித்தியாலயம் கதிரை தந்தது.
சிறு வயதில் கல்வியில் காட்டிய நாட்டத்தினால் ஆசிரியர்களின் பாராட்டைப்பெற்றார்.
பின்னர் காலம் செல்ல செல்ல கவனம் திரும்பியது.காற்றில் கூட உணவு சுமந்து வரும்
நெடுந்தீவின் வளத்திற்கு படிப்பு ஒரு கேடா என பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார்
ஆனாலும் கதைப் புத்தகங்கள்,நாளாந்த தினசரிகள் என்பவற்றை வாசிப்பதிலும்,உலக
நடப்புக்களை அறிவதிலும் இறுதிக்கணம்வரை ஆர்வமுடன் இருந்து வந்தவர்.
கண்டிப்பு என்பது பிள்ளைகளை துன்பப்படுத்தும் என சிந்திக்கும் அரிய அப்பா கந்தையா
அமையப்பெற்றதால் சிறுவனாக இருந்த பசுபதிக்கு அவரது எண்ணங்களே சித்தியாகின.
செம்மையான இளைஞராகினார்.
இவரை நோக்கி எறிந்த கண்கணைகள் எண்ணற்றவை இருந்தும் வரிந்துகொண்ட கண்களோ
அக்கால அழகுச்சிலை கனகம்மாவிற்கே சொந்தமாகியது.மணவாழ்வில் பார்ப்போர் கண்
பட்டுவிடும் படியான அரவணைப்பும் அன்பும் அள்ளிச்சொரிந்தார்.மனைவியுடன் சினிமா,
கோவில்,கொண்டாட்டம் என சுற்றித்திரிந்தனர்.
கைப்பிடித்த நாளிலிருந்து சிறந்த கணவனாக திகழ்ந்தார்,அன்னியோன்னியமான அவர்களது
குடும்ப வாழ்வின் எடுத்துக்காட்டாக
அரசரெத்தினம்
சரோஜாதேவி
வசந்தகுமார்
யோகாதேவி
விமலாதேவி
இந்திராதேவி
ஜெயக்குமார்
இரவீந்திரகுமார்
என எட்டு செல்வங்களைப் பெற்றெடுத்தனர்.
அலுக்காத சேவையாளன்,காலம் கருதாத உதவியாளன்,தீமைகளை தட்டிக்கேட்கும்
போர்க்குணாம்சமும் அவரிடம் இயல்பாகவே நிறைந்து கிடந்தது.
இரவோ பகலோ,சிறியவரோ பெரியவரோ,ஏழ்மையோ பணமோ எந்த வேறுபாடும் பார்க்காத
ஒரு விசித்திர மனிதனாக பசுபதி விளங்கினார்.
பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை கொண்டவர்.அவர்களின் திருப்தியே தனது
திருப்தியாக கருதியவர்.அவரது நல் உள்ளத்திற்கு ஏற்றாற்போல் மருமக்களும் அமைந்தனர்
தவமலர்(சுருவில்)
இலங்கநாதன்(சுன்னாகம்)
ரோகினி(அனலைதீவு)
சண்முகலிங்கம்(நெடுந்தீவு)
புவனேந்திரன்(வேலணை)
உதயகுமார்(கரம்பொன்)
புஷ்பலதா(நெடுந்தீவு)
ஜெசுதா(சுழிபுரம்)
ஆகிய மருமக்களுடன் பேரப்பிள்ளைகளையும் கண்டு சிறப்புடன் வாழ்ந்தவர்.
நெடுந்தீவை பிறப்பிடமாக கொண்டிருந்தாலும் தனது வாழ்விடமான புளியங்கூடலையும்
அதிகம் நேசித்தவர்,அந்த மக்களின் நன்மதிப்பையும் பெற்றவர்,மூலிகை மூலம்
சிறு சிறு நோய்களை குணப்படுத்துவதில் சிறந்த ஆற்றல் பெற்றிருந்த அவர்
இலவசமாகவே அந்த சேவையையும் செய்து வந்தவர்.
"உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தோர்
உள்ளத்துளெல்லாம் உளன்"
எனும் குறட்பா கூறுவது போல எல்லோரது உள்ளத்திலும் இடம் பிடித்தவர்.
பிறரை மதிக்கும் பண்பை நாமெல்லாம் கற்றதே இவரிடமிருந்துதான் எனலாம்
அத்தகைய பண்பாளர்.இந்த மனித மாணிக்கம் 30.06.2009 அன்று எம்மை விட்டுப்பிரிந்தார்
என்றபோதும்,
உள்ளத்தால் எம்முடன் இன்றும் என்றும் வாழ்வார்,வாழ்கிறார் என்பதே உண்மையாகும்.
ஓம் சாந்தி!
ஆசிரியன்.
திங்கள், 25 ஜூன், 2012
கருணைக் களமே!
பிறருக்கு உதவும் உள்ளம் போல
பெரிய சொத்து
யாரும் தேடியதில்லை
உங்களை அதுவாக சேர்ந்தது
உண்மை மனிதன் நீங்கள்!
உங்கள் உதவிகள் உதவிகளல்ல
பிறரை உயிர்ப்பித்தவை
காலம் உங்களை
இறைவனின் காலடிக்கு
செல்ல வைத்தது
நேசம் உங்களை
எங்கள் நெஞ்சறைக்குள் நிறைத்தது
உங்களுக்கு இறப்பென்பது இல்லை!
நீங்கள் இறவா வரம் பெற்றவர்!
எம்மோடு தொடர்கிறது உங்களின் வாழ்வு!
என்றும் தொடரும்...
பெரிய சொத்து
யாரும் தேடியதில்லை
உங்களை அதுவாக சேர்ந்தது
உண்மை மனிதன் நீங்கள்!
உங்கள் உதவிகள் உதவிகளல்ல
பிறரை உயிர்ப்பித்தவை
காலம் உங்களை
இறைவனின் காலடிக்கு
செல்ல வைத்தது
நேசம் உங்களை
எங்கள் நெஞ்சறைக்குள் நிறைத்தது
உங்களுக்கு இறப்பென்பது இல்லை!
நீங்கள் இறவா வரம் பெற்றவர்!
எம்மோடு தொடர்கிறது உங்களின் வாழ்வு!
என்றும் தொடரும்...
வெள்ளி, 22 ஜூன், 2012
வாழ்த்து!
வான்முகில் வளாது பெய்க
மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநீதி
விளங்குக உலகம் எல்லாம்.
திருச்சிற்றம்பலம்
மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநீதி
விளங்குக உலகம் எல்லாம்.
திருச்சிற்றம்பலம்
திருப்புகழ்!
பக்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப்புகழ் பாடி
முத்தனா மாறெனப் பெரு வாழ்வின்
முத்தியே சேர்வதற்கருள்வாயே
உத்தமா தானசற் குண நேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா
வித்தகா ஞானசத் திநி பாதா
வெற்றி வேலாயுதப் பெருமாளே.
திருப்புராணம்!
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்துள்ளமும் ஓங்கிட
மன்றுளாரடி யாரவர் வான் புகழ்
நின்றதெங்கும் நிலவி உலகெலாம்.
திருப்பல்லாண்டு!
சீரும் திருவும் பொழியச் சிவலோக
நாயகன் சேவடி கீழ்
ஆரும் பெறாத அறிவு பெற்றேன்
பெற்றதார் பெறுவார் உலகில்
ஊரும் உலகும் கழற உளறி
உமைமணவாளனுக்காட்
பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம்
பல்லாண்டு கூறுதுமே.
செவ்வாய், 19 ஜூன், 2012
திருவிசைப்பா!
கற்றவர் விழுங்கும் கற்பகக்கனியை
கரையிலா கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனைத்
திரு வீழிமிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம்
குளிர என் கண்கள் குளிர்ந்தனவே.
திங்கள், 18 ஜூன், 2012
திருவாசகம்!
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்மையே பெருக்கி பொழுதினை சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னை சிக்கெனப்பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே.
தேவாரம்!
இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனதழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமையாளுமாறீவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடு துறையரனே.
ஞாயிறு, 17 ஜூன், 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)