நெடுந்தீவை பிறப்பிடமாகவும்,புளியங்கூடலை வசிப்பிடமாகவும்,கொழும்பு, கச்சேரியடி ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த எமது தந்தையார் கந்தையா பசுபதி அவர்களின் மூன்றாம் ஆண்டு(30.06.2012)நினைவு நாளையொட்டி இவ்வலைப்பூ கனத்த இதயங்களுடன் ஆரம்பிக்கப்படுகிறது.
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 17 ஜனவரி, 2016
வியாழன், 24 டிசம்பர், 2015
திங்கள், 29 ஜூன், 2015
வியாழன், 29 ஜனவரி, 2015
ஞாயிறு, 29 ஜூன், 2014
ஐந்தாம் ஆண்டாக தவிக்கின்றோம்!
எங்கள் அன்புத்தந்தையே!உங்களைப் பிரிந்து ஐந்தாண்டுகள் ஆனபோதிலும் எம்மால் இன்னுமே ஜீரணிக்க முடியவில்லை.நீங்கள் பிரிந்து விட்டதாக எம் மனம்தனில் எண்ணவே முடியவில்லை.கந்தையா-நாகமுத்து தம்பதிகளின் இரண்டாவது மகனாக வந்துதித்த(15-03-1926)நீங்கள் நாகலிங்கம்-பார்வதி தம்பதிகளின் புதல்வியான கனகம்மாவை திருமணம் செய்து எட்டுப் பிள்ளைகளை பெற்று புளியங்கூடலில் வாழ்ந்து வந்தீர்கள்,காலம் செய்த கோலம் இடப்பெயர்வு என்ற ஒன்று வந்து எம்மை நாலா திசையிலும் பிரித்து வைத்தது.புதிய உறவுகள்,புதிய நட்புக்கள்,புதிய ஊர்கள் என வாழ்க்கையே மாறிப்போனது.ஆனாலும் ஊரும் நினைவுகளுமாகவே காலம் கடந்தோடியது.தற்காலிகமாக கொழும்பிலே வாழ்ந்து வந்த நீங்கள் பின்னர் கச்சேரியடியில் வாழ்ந்து வந்த வேளையிலே(30-06-2009)உங்கள் நினைவுடனே நாமிருக்க எம் நினைவுடனே நீங்கள் இருக்க காலன் என்ற கயவனால் பறிக்கப்பட்டீர்கள்!தந்தையே நாளும் பொழுதும் உங்கள் நினைவுடனேயே இருக்கும் எமக்கு கனவுகள் கூட நீங்கள் எம்முடன் இருப்பதாகவே வருகின்றது.நீங்கள் கொடுத்த இந்த உயிரும் உடலும் நிலைத்திருக்கும் மட்டும் உங்கள் நினைவுகளும் நிலைத்திருக்கும்.
சனி, 30 நவம்பர், 2013
உயிரே எம் பெரியண்ணா!
உயிரே எம் பெரியண்ணா!எங்கே இன்று
நீங்களண்ணா?
வருடம் ஒன்று ஆனதே
நாங்கள் பேசித்தானண்ணா!
விதியா?இது சதியா?
ஏன்தான் எமக்கிந்த கதியண்ணா!
அன்பு என்றால் எம் அண்ணா
என்று இருந்தோமே-இன்று
எல்லாம் இழந்து போனோமே!
வார்த்தையில் சொல்ல முடியாது,
உங்கள் பாசம்தனை
எழுத்தில் அடக்க முடியாது.
உங்கள் நினைவுகள்
தோன்றும் போதெல்லாம்
எம் சுய நினைவே இழந்து போகிறது!
அண்ணா உங்கள் பிரிவென்பது
கனவாகிடாதோ
என மனம் ஏங்குகிறது!
பிரிவைக்காணா பிறப்பென்றால்
இன்னுமொரு முறை
பிறந்திடுவோம்,
அன்பே எங்கள் வாழ்வென்று
உலகிற்கு போதனை
செய்திடுவோம்.
அண்ணா உங்கள் நினைவோடு
எம் வாழ்காலம் கழியுமண்ணா!
செவ்வாய், 25 ஜூன், 2013
நான்கு ஆண்டுகள் ஆனதோ!!!
என் தந்தையே உங்களை நினையாத நாளேது?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




