இன்னும் அந்த துயரச்செய்தி என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.என் தந்தையுடன் தொலைபேசியூடாக எப்பொழுதும் கதைத்து வருவேன்,இனி என் தந்தையுடன் பேசவே முடியாது என்பதை சொல்ல ஒலித்தது தொலைபேசி!வாழ்க்கையில் அதுதான் நான் முதன் முதலில் பேரிடியை தாங்கிய நாள்!பாசம் என்றால் என்ன என்பதை பாசத்தாலேயே கற்பித்த என் தந்தை எம்மை விட்டு மரணம் என்ற அரக்கனால் பிரிக்கப்பட்ட நாள்!அதுதான் 30.06.2009 ஆகும்.இப்போ நான்காம் ஆண்டும்(30.06.2013)வந்து விட்டது ஆனாலும் என் நினைவுகளிலும் கனவுகளிலும் என்னிடத்தில் இருந்து அவர் பிரியவே இல்லை!அவரைப்பற்றி அவரின் நினைவுகள்பற்றி எழுதுவதென்றால் எழுதிக்கொண்டே போகலாம்,என் கண்களில் இருந்து வரும் கண்ணீர் எழுத முடியாமல் தடுத்து விடும்!என் உயிர் அவர்தான்,இது அவர் கொடுத்த உருவமும் உயிரும்தான்!நான் வாழும் வரை என்னில் அவர் வாழ்வார்!
என் தந்தையே உங்களை நினையாத நாளேது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக