எங்களுக்கு உயிர் கொடுத்த பாசமிகு தந்தை எம்மை உடலால் பிரிந்த துயரமிகு 8ம் ஆண்டு நினைவு நாள் [30.06.2017]இன்றாகும்.அன்பாலே எம்மை கட்டுப்படுத்தியவர்,செயற்பாடுகளாலே நீதியை போதித்தவர்,பிழையை பொறுத்துக்கொள்ளாத கோபக்காரர்,எதிரியே வீடு தேடி வந்து விட்டால் வரவேற்கும் பண்பாளர்.ஒரு ஆபத்தென்றால் ஓடிவரக்கூடிய[சொந்தங்களை தவிர்த்து]நிறைய நட்புக்களை சேர்த்து வைத்திருந்தவர்.அவர் எனது தந்தை என்பதுக்கும் அப்பால் சிறந்த நட்போடும் இருந்தவர்.தொலைபேசியில் உரையாடும் போது கூட எனது மனக்கவலைகளை நான் அவரிடம் மட்டும்தான் பகிர்ந்துகொள்வேன்,அரசியல் நிலவரங்கள்,ஊரவர்கள் பற்றியெல்லாம் பேசிக்கொள்வோம்.இன்று எட்டாண்டுகள் ஓடி மறைந்து விட்டன,ஆனாலும் கனவுகளிலும் நினைவுகளிலும் அவரது எண்ண ஓட்டங்கள்தான் நிறைந்து கிடக்கின்றது.நெடுந்தீவை பிறப்பிடமாகவும்,புளியங்கூடலை வசிப்பிடமாகவும்,கொழும்பு, கச்சேரியடி ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த எமது தந்தையார் கந்தையா பசுபதி அவர்களின் மூன்றாம் ஆண்டு(30.06.2012)நினைவு நாளையொட்டி இவ்வலைப்பூ கனத்த இதயங்களுடன் ஆரம்பிக்கப்படுகிறது.
இந்த வலைப்பதிவில் தேடு
வியாழன், 29 ஜூன், 2017
எட்டாம் ஆண்டு நினைவுகள்!
எங்களுக்கு உயிர் கொடுத்த பாசமிகு தந்தை எம்மை உடலால் பிரிந்த துயரமிகு 8ம் ஆண்டு நினைவு நாள் [30.06.2017]இன்றாகும்.அன்பாலே எம்மை கட்டுப்படுத்தியவர்,செயற்பாடுகளாலே நீதியை போதித்தவர்,பிழையை பொறுத்துக்கொள்ளாத கோபக்காரர்,எதிரியே வீடு தேடி வந்து விட்டால் வரவேற்கும் பண்பாளர்.ஒரு ஆபத்தென்றால் ஓடிவரக்கூடிய[சொந்தங்களை தவிர்த்து]நிறைய நட்புக்களை சேர்த்து வைத்திருந்தவர்.அவர் எனது தந்தை என்பதுக்கும் அப்பால் சிறந்த நட்போடும் இருந்தவர்.தொலைபேசியில் உரையாடும் போது கூட எனது மனக்கவலைகளை நான் அவரிடம் மட்டும்தான் பகிர்ந்துகொள்வேன்,அரசியல் நிலவரங்கள்,ஊரவர்கள் பற்றியெல்லாம் பேசிக்கொள்வோம்.இன்று எட்டாண்டுகள் ஓடி மறைந்து விட்டன,ஆனாலும் கனவுகளிலும் நினைவுகளிலும் அவரது எண்ண ஓட்டங்கள்தான் நிறைந்து கிடக்கின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)